ஆசியக்கிண்ண தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணி
இலங்கையின் தம்புள்ளையில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளின், ஆரம்ப ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வெற்றி கொண்டுள்ளது.
இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) மற்றும் ஃபாலி வர்மா (Shafali Verma) ஆகியோரின் ஆரம்பத் துடுப்பாட்டம் இந்த வெற்றிக்கு உதவியுள்ளது.
இந்தப்போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 108 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. சிட்ரா அமீன் 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
நேபாளம் மகளிர் அணி
எனினும் இந்திய மகளிர் அணி, 14.1 ஓவர்களில் இந்த ஓட்ட இலக்கை 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நேபாளம் மகளிர் அணி, ஆசிய கிண்ண முதல் வெற்றியை பதிவு செய்தது.
116 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாளம், தொடக்க ஆட்டக்காரர் சம்ஜனா கட்காவின் 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களின உதவியுடன் இலக்கை அடைந்தது.
இந்தநிலையில், மலேசியா தாய்லாந்தையும், இலங்கை பங்காளதேஸ் அணியையும் இன்று எதிர்த்தாடுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 7 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan
