அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்திய பெண்
அமெரிக்காவின்(America) நியூஜெர்சி மாகாணத்தில் கார்டரெட் பகுதியில் ரூஸ்வெல்ட் அவென்யூ என்ற இடத்தில் வசித்து வந்த இந்திய குடும்பத்தினரின் வீட்டில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவத்திரல் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் நூர் மஹால் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்விர் கவுர் (வயது 29) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் தீவிர விசாரணை
ஜஸ்விர் கவுருடன் அவரது உறவுக்கார பெண் ககன்தீப் கவுர் (வயது 20) என்பவரும் தங்கி இருந்தார். இந்த நிலையில் ஜஸ்விர் கவுர் வீட்டுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர், அங்கிருந்த ஜஸ்விர் கவுர் மற்றும் ககன்தீப் கவுர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இதில் இரு பெண்களும் குண்டு பாய்ந்து விழுந்த நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் உடனே தப்பி ஓடியுள்ளார்.
தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து இரண்டு பெண்களையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜஸ்விர் கவுர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் ககன்தீப் கவுருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு துப்பாக்கி சூடு நடத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர் பஞ்சாப்பின் நகோதர் நகரை சேர்ந்தவர் எனவும் அவர் எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam