இலங்கையின் இயற்கை அனர்த்தங்களை கணிக்க இந்திய வானிலை நுட்பம்: ஆய்வில் வெளியான தகவல்
இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்படும் வானிலை முன்னறிவிப்பு நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை சிறப்பாகக் கணிக்க முடியும் என்று ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நுட்பங்கள், இலங்கையில் சீரற்ற வானிலையை எதிர்கொள்ள, பொதுமக்கள் சிறப்பாகத் தயாராவதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.
வானிலையை முன்னறிவிப்பவர்கள், கடும் காற்றின் வடிவங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வியத்தகு பருவ மாற்றம்
ஒரு பருவமழை காலநிலையானது, ஒரு பிராந்தியத்தில் நிலவும் காற்றின் திசையில் வியத்தகு பருவ மாற்றத்தால் வகைப்படுத்தப்படுகிறது.
முன்னணி வானிலை முன்னறிவிப்பு மாதிரிகளை கொண்டு வானிலையை ஒரு வாரத்திற்கு முன்பே துல்லியமாக கணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆய்வின் கண்டுபிடிப்புகள் இலங்கையில் அதிக மழைப்பொழிவை முன்னறிவிக்கும் திறனை மேம்படுத்தும் என்று இங்கிலாந்தின் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக யுனிவர்சிட்டி ஒப் ரீடிங்கின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
