இலங்கைக் கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் - முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சமாசங்களின் பிரதிநிதிகளான அன்னலிங்கம் அன்னராசா மற்றும் நாகராசா வர்ணகுலசிங்கம் ஆகியோர், இந்திய மத்திய நீதிமன்றத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் இலங்கைக் கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் முறைகள் மற்றும் சீன நிறுவனங்களின் கடலட்டை வளர்ப்பு தொடர்பான விடயங்கள் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.
இதன்போது, வடக்கு பகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள், கடல்வள அழிப்பு மற்றும் வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களின் செயற்பாடுகள் தொடர்பில் தங்களது நிலைப்பாடுகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில்
மேலும், சீன நிறுவனங்களுடன் தொடர்புடைய கடலட்டை வளர்ப்பு நடவடிக்கைகள் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கும் கடல் வளங்களுக்கும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும் அவர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்றொழில் பிரச்சினையில் இருநாட்டு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, சட்டவிரோதமான மற்றும் அழிவை ஏற்படுத்தும் கடற்றொழில் முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வடபகுதி கடற்றொழிலாளர்களின் உரிமைகள், கடல்வளப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால தலைமுறைகளின் வாழ்வாதாரம் ஆகியவற்றை பாதுகாக்க அரசாங்கம் தெளிவான கொள்கை மற்றும் நடைமுறை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் ஊடகவியலாளர் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
அன்னலிங்கம் அன்னராசா வடபகுதி கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் நீண்டகாலமாக கருத்து வெளியிட்டு வருபவர் என்பதும், இந்தியக் கடற்றொழில் விவகாரத்தில் சட்டவிரோத அடித்தள இழுவைமடி முறைக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் முன்வைத்துள்ளார்.