கனடாவில் இந்திய மாணவரொருவர் சுட்டுக்கொலை
கனடாவில் சுரங்க ரயில் நிலைய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
டொரண்டோவில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு மேலாண்மைத்துறை பயின்று வந்த குறித்த மாணவர் கடந்த வியாழக்கிழமை ஷெர்போர்ன் சுரங்க ரயில் நிலைய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக கனடாவிற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொலைக்கான காரணம் தெரியவில்லை எனவும் உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது உயிரிழந்த மாணவனின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.