பிரித்தானியாவில் காணாமல் போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு
பிரித்தானியாவில் உயர்கல்வியை தொடர சென்ற இந்திய மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீத்குமார் படேல்(23) என்ற குறித்த மாணவர் பிரித்தானியாவில் கடந்த மாதம் 17ஆம் திகதி காணாமல் போயிருந்ததாகவும், அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் கூறுகையில், “மீத்குமார் படேல், பகுதி நேரமாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
விசாரணை நடவடிக்கை
நவம்பர் 17ஆம் திகதி காலை நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த விசாரணையின்போது, மீத்குமார் படேல் தன் வீட்டுச் சாவியை கதவின் அருகிலேயே வைத்துவிட்டுச் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதனால், மீத்குமார் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தற்போதையை தகவல்களின்படி, மீத்குமார் படேல் மரணத்தில் சந்தேகம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
மேலும், குறித்த மாணவர் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர். அவரது உடலை இந்தியாவிற்கு அனுப்பிவைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |