பிரித்தானியாவில் உயிரிழந்த இந்திய மாணவன் : பொலிஸார் வெளியிட்ட தகவல்
பிரித்தானியாவில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவன் நதியில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேற்படிப்புக்காக பிரித்தானியா சென்ற இந்திய மாணவர் மித்குமார் படேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டன் சென்ற இவர் உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடர்வதற்கு திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த (17.11.2023)ஆம் திகதி நடைப் பயிற்சிக்கு சென்றபோது அவர் வீடு திரும்பாததால் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதன்போது தேம்ஸ் நதியில் ஒதுங்கிய அவரது உடலை மீட்ட பொலிஸார் நடைபயிற்சிக்கு சென்றபோது அவர் நதியில் தவறி விழுந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 7 மணி நேரம் முன்

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
