ஜெய்சங்கர் – விஜித ஹேரத் சந்திப்பு : இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக சந்தித்துள்ளார்.
X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், ஜெய்சங்கர் அந்த சந்திப்பு குறித்து திருப்தி தெரிவித்ததோடு, இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கத்தில் (IORA) மேலும் கலந்துரையாடல்களை எதிர்நோக்குவதாகவும் கூறினார்.
Good to meet with FM @HMVijithaHerath of Sri Lanka. Discussed our bilateral ties and the situation in the region. #NeighbourhoodFirst Look forward to further discussions at @IORAofficial #VisionMAHASAGAR 🇮🇳 🇱🇰 https://t.co/9kAVGU2XIB
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 26, 2026
"இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜய ஹேரத்தை சந்தித்ததில் மகிழ்ச்சி. நமது இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்தியத்தின் நிலைமை குறித்து விவாதித்தோம்" என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
சிறையில் இருக்கும் ஆபத்தான நபரை 68 முறை அழைத்த அரசியல் பிரமுகர்! வாக்குமூலத்தில் வெளியான பெயர்ப்பட்டியல்