இலங்கை கடற்றொழிலாளர்கள் தொடர்பில் இந்தியா கரிசனை கொள்ளுமா: வடமாகாண கடற்றொழிலாளர்கள் கேள்வி

Indian fishermen Ranil Wickremesinghe Sri Lanka India
By Ashik Nov 20, 2023 06:06 PM GMT
Report

கடற்றொழிலாளர்கள் தொடர்பில் இந்தியாவிடம் இலங்கை மாற்றீடாக கோரிக்கை ஒன்றை விடுத்தால் அது சாத்தியமாகுமா? என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (2011.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (17) இரவு யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு 2 இந்திய படகுகளும் 22 கடற்றொழிலாளர்களும் கொண்டு செல்லப்பட்டனர்.

இலங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக தமிழ் பெண் (Photos)

இலங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக தமிழ் பெண் (Photos)

நல்லிணக்க அடிப்படையில் விடுதலை

இந்த நிலையில் இந்திய நிதி அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் நல்லிணக்க அடிப்படையில் அவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்றொழிலாளர்கள் தொடர்பில் இந்தியா கரிசனை கொள்ளுமா: வடமாகாண கடற்றொழிலாளர்கள் கேள்வி | Indian Sri Lankan Fishermen Issue

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட வேண்டும். அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்ற சட்டத்தின் ஊடாக தீர்வை நாங்கள் வலியுறுத்தி இருக்கின்ற நிலையில், இந்த சட்டம் அவ்வாறு நடைமுறையில் இருக்கும் நிலையில், இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமாக நுழைந்து இலங்கையில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலையை பயன்படுத்தி சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட போது இலங்கை கடற்படை இலங்கை கடற்பரப்பிற்குள் வைத்து குறித்த இந்திய கடற்றொழிலாளர்கள் 22 பேரையும் கைது செய்துள்ளனர்.

இதன்படி குறித்த கடற்றொழிலாளர்களை எவ்வாறு ஜனாதிபதி விடுவிக்க முடியும்? அவ்வாறான அதிகாரம் இருக்கிறதா? என்ற கேள்வி எழுகின்றது.

ஒரு சட்டத்தின் ஊடாக வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் இடம் பெற்று வருகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி சட்டவிரோத செயற்பாட்டை செய்கிறவர்களை வெறுமனே நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தாமல் அவர்களை விடுவிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் ஆணவச் செயல் : கொந்தளிக்கும் கிரிக்கெட் உலகம்(Video)

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் ஆணவச் செயல் : கொந்தளிக்கும் கிரிக்கெட் உலகம்(Video)

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடு

அவ்வாறு விடுவிக்கும் முடியும் என்றால் நாளை பிரதமருக்கு அல்லது கடற்றொழில் அமைச்சருக்கும் அவ்வாறு அதிகாரம் செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

இலங்கை கடற்றொழிலாளர்கள் தொடர்பில் இந்தியா கரிசனை கொள்ளுமா: வடமாகாண கடற்றொழிலாளர்கள் கேள்வி | Indian Sri Lankan Fishermen Issue

வடபகுதி கடற்றொழிலாளர் குறிப்பாக மன்னாரில் இருக்கும் கடற்றொழிலாளர்கள் கிளிநொச்சி கடல் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு அவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் தாண்டி கடற்றொழிலில் ஈடு படுவதாக கூறி அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இன்று வரை விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இன்னும் அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்தில் செல்வது கூட ஒரு தடுக்கப்பட்ட விடையமாக இருக்கும் போது நாடு விட்டு நாடு வந்து எமது கடற்பரப்பை சூரையாடி சட்டவிரோத கடற்றொழிலிலை செய்கிறவர்களை எவ்வாறு ஜனாதிபதி விடுவிக்கலாம்?

ஜனாதிபதி இந்திய கடற்றொழிலாளர்கள் 22 பேரையும் விடுவித்தது அவரின் நிலைப்பாடாக இருந்தால் எங்களால் சொல்லப்படுகின்ற விடயத்தையும் அல்லது எங்களால் முன்வைக்கப் படுகின்ற, இலங்கையில் நாங்கள் முன்வைக்கின்ற கடற்றொழிலாளர்கள் நலன் சார்ந்த விடயங்களையும் அவர் கவனத்தில் எடுக்க வேண்டும்.

வேறு நாட்டிற்காக இலங்கையின் சட்டத்தை விட்டுக் கொடுத்து செயல்படும் ஜனாதிபதி எங்கள் நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த கேட்டுக் கொண்டால் அதை செவி சாய்க்காமல் இருப்பது கடற்றொழிலாளர்களுக்கு செய்கின்ற பெரிய துரோகம்.

இந்த நல்லிணக்கம் என்ற போர்வையில் இந்த கடற்றொழிலாளர்விடுவிக்கப்பட்டுள்ளனர். அதை ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தால் இலங்கையில் இருந்து சென்றிருக்கின்ற எமது கடற்றொழிலாளர்களின் படகுகள் வட பகுதியை சேர்ந்த 10ற்கும் மேற்பட்ட படகுகள் அங்கு இருக்கின்றன.

அதை அவர்கள் நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்க கூறியிருக்க முடியும். அல்லது தென் பகுதியில் உள்ள எமது கடற்றொழிலாளர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு அங்கு சிறைகளில் வாடுகிறார்கள். அவர்களையும் விடுவிப்பதற்கு ஜனாதிபதி இனியாவது முயற்சி எடுக்க வேண்டும்.

நல்லிணக்கம் என்ற போர்வையில் ஒன்றை கை நீட்டி உள்ளார். அதற்கு இந்தியாவிடம் இலங்கை மாற்றீடாக கோரிக்கை விடுத்தால் செய்யுமா என்பதை இந்த வேலையில் நாங்கள் கேட்டுக்கொள்ளுகின்றோம்” என்றார்.

யாழ். இளைஞனின் மரணத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும்: மணிவண்ணன் காட்டம் (Video)

யாழ். இளைஞனின் மரணத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும்: மணிவண்ணன் காட்டம் (Video)

மனித புதைகுழி விடயத்தில் அரசாங்கம் மெத்தன போக்கினை காட்டுகிறது: ரவிகரன் குற்றச்சாட்டு

மனித புதைகுழி விடயத்தில் அரசாங்கம் மெத்தன போக்கினை காட்டுகிறது: ரவிகரன் குற்றச்சாட்டு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US