இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சினை: அன்னராசா வெளியி்ட்டுள்ள தகவல்
இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நல்ல தீர்வை காண்பதற்குரிய நல்ல சமிக்ஞையாக தமிழக கடற்றொழிலாளர்கள் உடனான சந்திப்பு அமைந்தது என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் இன்று மாலை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

செவ்வந்தி பதுங்கியிருப்பதாக ஹோட்டல் ஒன்றை பெரும் படையுடன் சுற்றிவளைத்த பொலிஸார் - காத்திருந்த அதிர்ச்சி
கடற்றொழில் பிரச்சினை
மேலும் கருத்து தெரிவிக்கையில், "இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வருவதை வடக்கு கடற்கரை சமூகம் வரவேற்பதோடு மகிழ்ச்சியும் அடைகின்றது.
இந்த நிலையில், இலங்கை - இந்திய கடற்றொழில் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்கு பாரத பிரதமரும் இலங்கையினுடைய ஜனாதிபதியும் விட்டுக் கொடுப்போடு நல்லெண்ண அடிப்படையிலே சுமுகமான தீர்வு ஒன்றை மேற்கொண்டு, வடக்கு மாகாணத்தை பிரதிபடுத்துகின்ற 50,000 குடும்பங்கள் இரண்டு இலட்சம் மக்களுடைய வாழ்வாதாரம் தொடர்பான கரிசனையை எடுக்க வேண்டும்.
இந்த இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வை காண்பதற்கு வழிகோலும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கடற்றொழில் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளதுடன் அதை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

இதய திருடன் படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
