வவுனியா தெரிவத்தாட்சி அலுவலகத்தில் அடையாள அட்டை இலக்கம் இல்லாத விண்ணப்பம்
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த வேட்பாளர் விண்ணப்ப படிவத்தில் ஒருவருடைய அடையாள அட்டை இலக்கம் இல்லாத போதும், எவரையும் நிராகரிக்காது குறித்த விண்ணப்பத்தை வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கடந்த 20 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவுக்கு வந்திருந்தது.
இதன்போது பல மாவட்டங்களில் பல்வேறு காரணங்கள் கூறி பல வேட்பு மனுக்கள் நிரகரிக்கப்பட்டிந்தன. அதில 22 வேட்புமனுக்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செயயப்பட்டும் உள்ளது.
வவுனியா மாநகர சபை
இந்நிலையில், வவுனியா மாநகர சபையில் போட்டியிடும் சுயேட்சை குழு வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்த போது அதில் நேரடி வேட்பாளராக 10 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரது விபரங்கள் பதியப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் குறித்த வேட்பாளரது தேசிய அடையாள அட்டை இலக்கம் பதிவு செய்யப்படாது விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த விண்ணப்பங்களை மேற்பார்வை செய்த வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர்களும், அதனை சரி என ஏற்றுக கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால் வேறு சில இடங்களில் தேசிய அடையாள அட்டை இலக்கம் குறிப்பிடப்படாத விண்ணப்பங்கள் மற்றும் நபர்கள் நிராகரிக்கப்பட்ட போதுடம் வவுனியாவில் அந்த நடைமுறை பின்பற்றப் படவில்லை.
உள்ளுராட்சி சட்ட விதிமுறை பொதுவானதாக காணப்பட்ட போதும் வவுனியாவில் ஏன் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
