மாலைத்தீவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்திய படையினர்
மாலைத்தீவில் (Maldives) நிலைகொண்டிருந்த 51 இந்திய படைவீரர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மாலைத்தீவு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்திய (India) ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதான பேச்சாளர், குறித்த படையினர் நாடு திரும்பியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், மாலைத்தீவில் நிலைகொண்டிருக்கும் இந்திய வீரர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தல்
அதேவேளை, மாலைத்தீவில் உள்ள டோர்னியர் விமானம் மற்றும் உலங்கு வானூர்திகளை நிர்வகிப்பதற்கு இந்தியாவிலிருந்து சிவிலியன் நிபுணர்களை பணியமர்த்துவதற்காக இரண்டு நாடுகளும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மாலைத்தீவிலிருந்து இந்திய படையினர் திருப்பி அனுப்பப்பட்டதற்கு காரணம் அந்நாட்டு ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரத்தின் ஒரு மூலக்கல்லாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
இதன்படி, மாலைத்தீவு ஜனாதிபதியின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து உடனடியாக இந்திய இராணுவ படையினரை திரும்பப் பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
