பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை நோக்கி இந்திய படையினர் துப்பாக்கி பிரயோகம்
இந்திய (India)- ஜம்மு காஸ்மீரின் (Jammu and Kashmir) சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே, பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்காக இந்திய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது நேற்றிரவு (10.05.2024) இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் (Pakistan) பக்கத்தில் இருந்து இந்த ஆளில்லா விமானம் வருவதைக் கண்ட இந்திய படையினர் தொடர்ச்சியாக அதனை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
தேடுதல் நடவடிக்கை
இதனையடுத்து, குறித்த ஆளில்லா விமானம் மீண்டும் பாகிஸ்தான் பக்கம் திருப்பிவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த ஆளில்லா விமானத்தில் இருந்து ஏதேனும் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் நிலத்தை நோக்கி வீசப்பட்டதா என்பதை கண்டறிய நாராயண்பூர் என்ற பிரதேசத்தில் தேடுதல்கள் நடத்தப்படுவதாக இந்திய படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான ஆளில்லா விமானங்கள் மூலமே பாகிஸ்தான் பக்கத்தில் இருந்து இந்திய பக்கத்துக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்ற சம்பவங்கள் முன்னர் பதிவாகியுள்ள நிலையிலேயே இந்த தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |