இலங்கையில் றோவின் மறைமுக நகர்வு! தகவல்கள் அம்பலம்
அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உளவுப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முறைகேடுகள் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தியதன் மூலம் உலக அளவில் எட்வர்ட் ஸ்னோவ்டன் பேசப்பட்டுள்ளார்.
ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக ஸ்னோவ்டன் வெளியிட்ட தகவல்கள் உலகையே தலைகீழாக மாற்றியமைத்தது.
சீ.ஐ.ஏ உளவுப் பிரிவு உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் பிரபலங்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதாகவும், மின்னஞ்சல் கணக்குகளில் ஊடுறுப்பதாகவும் அம்பலப்படுத்தியிருந்தார்.
இந்தியாவின் றோ உளவுப்பிரிவின் செயற்பாடுகள்
அந்த வகையில், ஸ்னோவ்டன் போன்ற ஒருவர் இந்தியாவின் றோ உளவுப் பிரிவின் செயற்பாடுகள் குறித்த தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக ஆங்கில இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
றோ உளவுப் பிரிவின் உயர் பதவி வகித்த கௌரவ் என்ற நபரே இந்த திடுக்கிடும் அதிர்ச்சித் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
கௌரவ் வெளியிட்ட தகவல்கள் மிகவும் இரகசியத்தன்மை கொண்ட தகவல்களாகும், அந்த தகவல்களில் முக்கியமான சில தரவுகள் கீழே தரப்பட்டுள்ளன.
இந்திய எல்லைப் பகுதிக்குள் இலங்கை ஒருபோதும் இரகசிய செயற்பாடுகளை மேற்கொண்டதில்லை என்ற போதிலும் இந்தியா, இலங்கையில் இரகசிய செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளது.
கௌரவ் இலங்கையில் பல ஆண்டுகளாக இரகசிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அவர் இந்தியாவிற்கு மீள அழைக்கப்பட்டுள்ளார்.
2019ம் ஆண்டு தேர்தல்களின் பேர்து அவர் மீளவும் இலங்கை திரும்பியுள்ளார். இலங்கை திரும்பிய கௌரவ், மஹிந்த ராஜபக்சக்களை மீளவும் ஆட்சி பீடத்தில் ஏற்றுவதற்கு கடுமையாக உழைத்தார்.
இலங்கையின் வீழ்ச்சியை வேகப்படுத்தும் முயற்சி
இலங்கையில் சமூக மற்றும் அரசியல் ரீதியான செல்வாக்குடைய நபர்களை பற்றிய தகவல்களை றோ அடிக்கடி திரட்டியது.
இலங்கையில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிராந்திய தலைவர்கள், நீதிமன்ற அதிகாரிகள், அரசாங்க நிறுவனங்களின் நிரந்தர செயலாளர்கள், ஊடகவியலாளர்கள், இராணுவ உயர் அதிகாரிகள், பொலிஸ், மருத்துவர்கள், சிவில் செயற்பட்டார்கள் உள்ளிட்டவர்களுக்கு றோ கையூட்டலாக பணம் மற்றும் ஏனைய சலுகைகளை வழங்கி அவர்களை தங்களது வலையில் சிக்க வைத்துள்ளது.
கோவிட் பெருந்தொற்றுடன் இலங்கை வீழ்ச்சியடையும் என்பது றோவிற்கு நன்கு தெரியும். இலங்கையின் வீழ்ச்சியை வேகப்படுத்தும் முயற்சியில் றோ ஈடுபட்டது.
நாடு வங்குரோத்து அடைந்துள்ளதாக நாடாளுமன்றிற்கு அறிவிக்காது , மத்திய வங்கி ஆளுனர் நேரடியாக பகிரங்க அறிவிப்பு விடுத்தமையின் பின்னணியில் றோ செயற்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 2022ம் ஆண்டில் இடம்பெற்ற பாரிய போராட்டத்தின் பின்னணியில் றோ செயற்பட்டுள்ளது. றோ சில போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகங்களுக்கு பணம் வழங்கியுள்ளது.
வலுவான அரசியல் தலைவர்கள்
இலங்கையில் வலுவான அரசியல் தலைவர்கள் உருவாவதனை றோ விரும்பவில்லை. ரணில் விக்ரமசிங்க வலுவான தலைவராக உருவாவதனை றோ தடுத்து வந்தது.
13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால் இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்க றோ திட்டமிட்டது.இந்த திட்டத்திற்காக ராமநாதனபுரம் மற்றும் ரோஹின்ய அகதிகள் குழுவொன்றுக்கு றோ பயிற்சி வழங்கியுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சு றோவின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது. இலங்கை வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றி வரும் பெண் அதிகாரியொருவர் இவ்வாறு றோவிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு விசுவாசமாக செயற்பட்டுள்ளார் என்பது பற்றிய விபரங்களை கௌரவ் வெளியிட்டுள்ளார்.
றோ உளவுப் பிரிவு தலையற்ற இராட்சத உடலைக் கொண்ட ஓர் அமைப்பாக பூகோள அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கௌரவ் வெளியிட்டுள்ள தகவல்களை அவதானித்தால் இது உண்மையானது என்பது புலனாகின்றது என குறித்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
