இலங்கையை வந்தடைந்த இந்திய கப்பலை பார்வையிட படையெடுத்த மக்கள்(Video)
பேசாலை நடுக்குடா கடற்கரை பகுதியில் நேற்று மாலை கரை தட்டிய கப்பல் மற்றும் பாஜ் என அழைக்கப்படும் கொள்கலன் தாங்கி ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று வந்துள்ளது.
இந்த கப்பல் இன்று(08.07.2023) மாலை 4 மணியளவில் பேசாலை நடுக்குடா கடற்கரையை வந்தடைந்துள்ளது.
இயந்திர கோளாறு
மாலைதீவில் இருந்து இந்தியாவின் தூத்துக்குடி நோக்கி கொள்கலன் தாங்கியை இழுத்துக்கொண்டு வந்த கப்பல் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக மன்னார் பேசாலை நடுக்குடா பகுதியில் நேற்று (07.07.2023) மாலை கரை தட்டி உள்ளது.

இதன்போது அந்த கப்பலில் 11 பணியாளர்கள் இருந்ததாகவும் இந்த விடயம் தொடர்பில் இந்தியாவின் கப்பல் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கமைவாக கடற்படையும்,சமுத்திரவியல் சேவை மற்றும் மீட்புப் பணியகம் ஆகியவை இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து மாலைதீவுக்கு பொருட்களை கொண்டு சென்ற பாஜ் என அழைக்கப்படும் கொள்கலன் தாங்கி மீண்டும் கப்பல் ஒன்றின் மூலம் இந்தியாவை நோக்கி கொண்டு சென்ற போதே இலங்கை கடற்பரப்பில் கரை தட்டியது.
87 மீற்றர் நீளம் கொண்ட குறித்த கொள்கலன் தாங்கி எந்தவித பொருட்களும் அற்ற நிலையில் கப்பல் மூலம் இழுத்து வரப்பட்டது.
கப்பலை பார்வையிட்ட மக்கள்

இதன்போது கடல் பிராந்தியத்தில் வீசிய கடும் காற்று,அலையின் சீற்றம் காரணமாக அந்த கப்பல் மற்றும் கொள்கலன் தாங்கி ஆகியவை இலங்கை கடற்பரப்பை நோக்கி இழுத்து வரப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குறித்த கப்பல் மற்றும் பாஜ் என அழைக்கப்படும் 87 மீற்றர் நீளம் கொண்ட கொள்கலன் ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்திய கப்பல் பேசாலை நடுக்குடா பகுதியை வந்தடைந்த கப்பல் ஆகியவற்றை மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
எனினும் குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்த நிலையில் தற்போது வரை மீட்டுச் செல்வதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.










தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan