கே. பி உடன் தொடர்பை ஏற்படுத்திய றோ: கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இந்திய உளவு விமானம்(Video)
பாக்கு நீரிணை ஊடாக விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கு அனுப்பப்பட்ட ஆயுதங்களை காட்டிக்கொடுத்தவர்கள் இந்திய புலனாய்வு அமைப்பினர் என இலங்கையின் புலனாய்வு செய்தியாளர் எம். எம் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
2009 ஆண்டுக்கு முன்னரான சூழலில் கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனுடன் இணைந்து ஆயுத கொள்முதல் செய்தவர் இந்திய புலனாய்வு அமைப்பை சேர்ந்த உளவாளி.
இவ்வாறே விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வருகைதந்த அத்தனை இராணுவ தளபாடங்களையும் காட்டி கொடுத்தார்கள் இந்திய புலனாய்வு அமைப்பினர்.
இதன் பின்னரே இலங்கையின் கடற்படை அத்தனை ஆயுத கப்பல்களையும் தாக்கி அழித்தனர்." என தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல இலங்கை அரசியல் போக்குகளை அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு..





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
