அவுஸ்திரேலியாவில் விமானம் புறப்படும் முன் மயங்கி விழுந்த இந்திய வம்சாவளி பெண் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவிலிருந்து(Australia) 4 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோரை பார்க்க இந்திய செல்லவிருந்த பெண் ஒருவர் விமானம் புறப்படும் முன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து டெல்லி புறப்பட்ட குவாண்டாஸ் விமானத்திலேயே குறித்த 24 வயதுடைய இந்திய வம்சாவளி பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காசநோய் பாதிப்பு
இந்திய வம்சாவளி பெண்ணான மன்ப்ரீத் கவுர் பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவில் சமையல் கலையை கற்க சென்றுள்ளதோடு, படிக்கும் போதே வேலை செய்து தனது செலவுகளை அவர் கவனித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின் இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டு மெல்போர்னில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் எறியுள்ளார்.
இதன்போது விமானத்தில் ஏறி அவர் ஆசன பட்டியை(Seat belt) அணிய முயன்றபோது திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இவர் காசநோயின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |