சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு தூக்கு தண்டனை
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞரொருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில், மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞரான கல்வந்த் சிங், கடந்த 2013-ம் ஆண்டு, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, 2016-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ஜூலை 7 ஆம் திகதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோன்று சிங்கப்பூரை சேர்ந்த நோராஷாரீ கோயஸ் என்பவருக்கும் போதைப்பொருள் கடத்தலில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு ஆதரவாக தூக்கு தண்டனை முடிவினை மாற்றுமாறு கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் முன்பாக மனித உரிமை ஆர்வலர்கள் நேற்று முன்தினம் மெழுகுவர்த்தி ஏந்தி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கு
இந்த நிலையில், இருவரும் சிங்கப்பூரில் உள்ள சாங்கி சிறையில் வைத்து தூக்கில் போடப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற மனநிலை பாதிக்கப்பட்ட நபர் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி தூக்கில் போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் சட்டப்படி, 15 கிராமுக்கு மேற்பட்ட போதைப்பொருளை கடத்துபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.





புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
