இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்த இந்திய கடற்படைத் தளபதி (Photos)
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு நேற்றைய தினம் (13.12.2022) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இந்திய கடற்படைத் தளபதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையிலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் இராணுவ இராஜதந்திரம் தொடர்பில் சினேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
நினைவுச் சின்னங்கள்
சந்திப்பைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சுக்கான கடற்படை தளபதியின் விஜயத்தைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதியும் பாதுகாப்புச் செயலாளரும் நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக் கொண்டனர்.
அதன் பின்னர், கடற்படை தளபதி விருந்தினர் புத்தகத்தில் தனது கையொப்பத்தை இட்டுள்ளார்.
இந்த சந்திப்பில், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






