இந்திய சுதந்திர தினத்தை தேசிய கொண்டாட்டமாக அமெரிக்கா அறிவிப்பு
ஆகஸ்ட் 15 ஆம் திகதியை இந்திய தேசிய கொண்டாட்ட தினமாக அறிவிக்க அமெரிக்க மாளிகையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்திய சுதந்திர தினத்தை உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளின் தேசிய கொண்டாட்ட நாளாக அறிவிக்க அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் பிரதிநிதிகள் சபையில் தீர்மானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிதல்
இந்தத் தீர்மானத்திற்கு இந்திய - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஸ்ரீ தானேதர் தலைமை தாங்குகிறார்.
ஜனநாயக விழுமியங்களில் வேரூன்றிய இரு நாடுகளுக்கிடையிலான கூட்டாண்மை, உலக ஜனநாயகத்தை தொடர்ந்து முன்னேற்றுவதோடு, அனைத்து நாடுகளுக்கும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமையை வளர்க்கும் என்ற நம்பிக்கையை இந்தத் தீர்மானம் வெளிப்படுத்துகிறது.
ஜூன் 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் அரசுப் பயணம், ஜனநாயகம், பன்மைத்துவம், சுதந்திரம், மரியாதை ஆகியவற்றுக்கான பொதுவான நலன்கள் மற்றும் பகிரப்பட்ட கடப்பாடுகளின் அடிப்படையில் நாடுகளுக்கிடையே புதிய நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
