அமெரிக்க இராணுவ தலைமையகத்தில் இந்தியரொருவருக்கு முக்கிய பதவி?
அமெரிக்க இராணுவ தலைமையகத்தில் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கான விமானப்படையின் உதவி செயலாளர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய,ரவி சவுத்ரி என்பவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் 1993 முதல் 2015 வரையில் அமெரிக்க விமானப்படையில் அதிகாரியாகவும், அமெரிக்க போக்குவரத்து துறையில் முக்கிய பதவியிலும் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்,இவர் சி-17 ரக போர் விமானத்தில் விமானியாக உலகின் பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க இராணுவ தலைமையகத்தில் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கான விமானப்படையின் உதவி செயலாளர் பதவியில் இவர் அமர்த்தப்படுவதற்கு அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபை தனது ஒப்புதலை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam