இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகள்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் இந்தியாவின் நான்காம் கட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் பத்து மாவட்டங்களில் 45 தோட்டங்களில் 1,300 வீடுகள் இந்த திட்டத்தின் மூலம் கட்டப்படவுள்ளன.
A ceremony was held at the Presidential Secretariat to inaugurate a housing project financed by the Government of #India to construct 10,000 houses for plantation sector workers. (1/2) pic.twitter.com/nv56NOkst8
— President's Media Division of Sri Lanka - PMD (@PMDNewsGov) February 19, 2024
இந்திய வீடமைப்புத் திட்டம்
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 28 நவம்பர் 2023 அன்று, இந்திய உயர்ஸ்தானிகராலயம், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 4வது கட்டத்தின் கீழ் இலங்கையின் தோட்டப் பகுதிகளில் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இரண்டு குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |