இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்
மாஹோ மற்றும் அனுராதபுரத்துக்கு இடைப்பட்ட தொடருந்து மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும், பெரிய சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அபிவிருத்தி திட்டத்துக்கான முதல் தவணையாக இந்திய அரசாங்கம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபாய் 770 மில்லியன்) விடுவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோரால் கடந்த ஏப்ரல் மாதம் இந்த திட்டம் கூட்டாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
அமெரிக்க டொலர்
ஆரம்பத்தில் இந்திய கடன் உதவியின் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் பின்னர் முழு மானியமாக இந்திய அரசாங்கத்தினால் மாற்றப்பட்டது.
இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை 2026 ஆண்டு ஓகஸ்ட் மாதத்துக்குள் நிறைவுசெய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடருந்து பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு மூலம் தாமதங்களைக் குறைக்கும் ஒரு திட்டமாகும்.
இலங்கையின் தொடருந்து சேவையின் வளர்ச்சிக்கான இந்தியாவின் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் ஆதரவு திட்டத்தின் முதல் தவணையே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா



