கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்கள்
கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் சுமார் 2.37 பில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் நிதியுதவியுடன் வழங்கப்படும் புலமைப்பரிசில்கள் இன்று (30.10.2025) வழங்கப்பட்ட நிலையில், நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளாார்.
இந்திய அரசின் உதவியுடன், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு மொத்தம் ஒன்பது மில்லியன் ரூபா புலமைப் பரிசில் நிதி காசோலையாக வழங்கப்பட்டுள்ளன.
புலமைப்பரிசில்கள்
இவை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும், பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்து கொண்டு மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கியுள்ளார்.
முன்னாள் இராணுவத்தினரால் பாதாள குழுக்களுக்கு கைமாற்றப்படும் துப்பாக்கிகள்.. அநுர விடுத்த எச்சரிக்கை!
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? Cineulagam