வானில் திடீரென தீப்பற்றி எரிந்த இந்திய விமானம்! 177 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கம்
டெல்லியில் இருந்து இன்று இரவு பெங்களூர் புறப்பட்ட IndiGo பதிவு இலக்கம் 6E 2131 விமானம் ஓடு பாதையில் ஓடியபோது இன்ஜினில் திடீரென தீப்பொறி ஏற்பட்டதையடுத்து அவசரமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக விமான சேவை நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இதேவேளை, விமானத்தில் 177 பயணிகளும், 7 விமான பணியாளர்களும் பயணித்துள்ளதாகவும் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வெளிச்சத்திற்கு வரும் குணசேகரின் இரகசிய விளையாட்டு! ஜனனி அடுத்து எடுக்க போகும் முடிவு என்ன? Manithan
