வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்
அபுதாபி ஜாயித் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லியை நோக்கி புறப்பட்ட விமானமொன்றில் மேலே பறந்த சில நிமிடங்களில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் விமானிகள் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினர்.அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு இண்டிகோ விமானத்தை மஸ்கட்டில் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது.
பராமரிப்பு பணிகள்
தொடர்ந்து விமானம் பத்திரமாக அங்கு தரையிறக்கப்பட்டதோடு பின்னர், பயணிகள் அனைவரும் மஸ்கட்டில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் எனவும். பயணிகளுக்கு இடையூறு மற்றும் தடங்கல் ஏற்பட்டதற்கு வருந்துவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானம் மஸ்கட்டில் தேவையான பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் மீண்டும் வானில் பறக்க அனுமதிக்கப்படும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |