இந்திய கடற்தொழிலாளர்களுக்கு விளக்கமறியல்
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் 12 பேரையும் டிசம்பர் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று ( 22.12.2022 ) உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம்(21.12.2022) பகல் பருத்தித்துறை அருகே இந்திய கடற்தொழிலாளர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த பன்னிரெண்டு கடற்தொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் மயிலிட்டிக்கு அழைத்து வரப்பட்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியகடற்தொழிலாளர்களுக்கு எதிராக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரால்
பருத்தித்துறை நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட வழக்குத்தாக்கலின் அடிப்படையில்
விசாரணை மேற்கொண்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி குறித்த கடற்தொழிலாளர்களை
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.





புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
