அரசுடமையாக்கப்பட்ட இந்திய கடற்றொழிலார்களின் படகுகள்!
எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளமையை அடுத்து அவற்றை துண்டுகளாக உடைத்து அச்சுவேலி கைத்தொழில்பேட்டைக்கு ஏற்றி செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் 124 படகுகள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் நீண்ட காலமாக தரித்து வைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு தரித்து நின்ற படகுகளுக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவற்றில் 07 படகுகளை இந்திய கடற்றொழிலாளர்களுக்கு திருப்பி வழங்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
மூன்றாம் கட்ட வேலைகள்
இதனையடுத்து, படகுகளின் உரிமையாளர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு கடந்த 25 ஆம் திகதி வந்து தமது படகுகளைப் பார்வையிட்டனர்.
இவற்றில் 33 படகுகள் அரசுடமையாக்கப்பட்டதை அடுத்து அவை துண்டுகளாக உடைக்கப்பட்டு அச்சு வேலி கைத்தொழில் பேட்டைக்கு ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் எஞ்சிய படகுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றில் இடம் பெற்று வருகின்றன.
நாளை(1) குறித்த துறைமுகத்தில் ஜனாதிபதியினால் மூன்றாம் கட்ட வேலைகள் ஆரம்பிப்பதற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 22 மணி நேரம் முன்

Ethirneechal: தடபுடலாக நடக்கும் தர்ஷன் கல்யாணம்.. பதற்றத்தில் அறிவுக்கரசி- பொண்ணு யார் தெரியுமா? Manithan
