12 இந்திய மீனவர்களும் நிபந்தனையுடன் விடுவிப்பு: படகுகள் அரசுடமை
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 12 மீனவர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு கடந்த திங்கட்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் இன்று வரை விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்திய துணை தூதரகம்
இந்நிலையில் இன்றைய தினம் (17.03.2023) பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 12 மீனவர்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்கள் பயன்படுத்திய படகு அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பன்னிரண்டு மீனவர்களையும் இந்தியாவிற்கு அனுப்பும் பணிகளில் இந்திய துணை தூதரகம் ஈடுபட்டு வருகின்றது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா... ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்த இலங்கை அமைச்சர் News Lankasri
