இந்திய கடற்றொழிலாளர்களின் நடவடிக்கை குறித்த ஆவணப்படம் ஜனாதிபதிக்கு..!
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய இழுவைமடி தொழிலை வெளிப்படுத்துடும் ஆவணப்படம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்படுவதற்காக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரிடம் கையளிப்பு
குறித்த ஆவணப்படம், மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்டது.
இன்று (17.03.2025) யாழ்ப்பாணம் - கந்தர்மடம் பகுதியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் கடற்றொழில் அமைச்சரிடம் கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது.
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய இழுவைமடி தொழிலால் கடல் வளங்கள் பாதிக்கப்படுவதுடன் பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
