இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை - இந்தியாவுடன் கலந்துரையாடிய டக்ளஸ்
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கான இணக்கப்பாட்டு கலந்துரையாடலுக்கு தயார் என தமிழ்நாட்டு கடற்றொழில் துறை அமைச்சருக்கு இலங்கை கடற்றொழில் அமைச்சர் டாக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - புலிபாய்ந்த கல் கடற்கரைக்கு இன்றையதினம் (28.02.2024) விஜயம் செய்த அமைச்சர், ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கலந்துரையாடலுக்கு இணக்கம்
தமிழ்நாட்டு கடற்றொழில் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று என்னுடன் தொலைபேசியில் உரையாடி இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்றார்.
அவர் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் நேற்று மாலை கலந்துரையாடுவதாகவும் அவர் ஊடாக பாண்டிச்சேரி முதலமைச்சருடன் கலந்துரையாடுவதாகவும் எனக்கு கூறினார்.
அதேநேரத்தில், என்னையும் அந்த கலந்துரையாடலுக்கு நேரில் அல்லது தொலைபேசியில் கலந்நு கொள்ள முடியுமா என்று கேட்கப்பட்டதற்கு நான் இணங்கியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |