முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்றொழிலில் இந்திய கடற்றொழிலாளர்கள்!
கடல் சீற்றம் காரணமாக கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கடல் சீற்றத்தால் முடங்கியுள்ளனர்.
கடற்படை வேடிக்கை பார்க்க முல்லைத்தீவு கடற்கரையோரமாக வந்து இந்தியன் இழுவைமடி படகுகள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு உள்ளிட்ட கரையோரங்களில் உள்ள கடற்பகுதியில் சீரற்ற காலநிலையால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.
இழுவைமடி தொழில்
இதன் காரணமாக கடற்றொழிலாளர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திய இந்தியன் இழுவைமடி கடற்றொழிலாளர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு ஒரு கிலோமீட்டர் கரைக்கு அண்ணளவாக வருகை தந்து இழுவைமடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இந்திய இழுவை மடி கடற்றொழிலாளர்கள் அழித்துச் செல்வதை தடுப்பதற்கு இதுவரை எந்தவித நிரந்தர முயற்சிகளையும் உரியவர்கள் எடுக்கவில்லையென கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

