இலங்கை கடற்பரப்பினுள் கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்களுக்கு விளக்கமறியல்!
இலங்கை கடற்பரப்பினுள் கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் மூவரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி விரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி வந்து கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் மூவர் நேற்று முன்தினம்(19) காரைநகர் கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
விளக்கமறியல் உத்தரவு
இதன் போது அவர்கள் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கைதான மீனவர்களை கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைத்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நேற்றையதினம்(20) முற்படுத்தப்பட்டனர்.
இதன்போதே, குறித்த மூன்று இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 03.11.2022ம் திகதிவரை விளக்கமறியலில்
வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
