இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் நேற்று (13.01.2024) கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
அதன்பின் அவர்களை, மயிலிட்டி துறைமுக கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், அந்த கடற்றொழிலாளர்களை, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan