கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
கிளிநொச்சி இரணைதீவிற்கு அண்மித்த கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட எட்டு இந்திய கடற்றொழிலாளர்களுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் திகதி அதிகாலை இரணைதீவிற்கு அன்மித்த கடற்பரப்பில் அத்துமீறிய கடற்றொழிலில் ஈடுபட்ட எட்டு இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, குறித்த கடற்றொழிலாளர்களை நேற்றையதினம்(22) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, அவர்களுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தண்டப்பணம்
இதன்போது, தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை பயன்படுத்திய முதலாவது குற்றச்சாட்டுக்காக, அவர்களுக்கு ஆறு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன், அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இரண்டாவது குற்றச்சாட்டுக்காக எட்டுப் பேருக்கும் தலா ஐம்பதாயிரம் தண்டப்பணம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri