இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்பான நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 23 கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கறியில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
டிசம்பர் 27 ஆம் திகதி, ஜனவரி 2 மற்றும் ஜனவரி 3 ஆகிய திகதிகளில் கைதான கடற்றொழிலாளர்களுக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள் நெறிப்படுத்தியுள்ளனர்.
மற்றவர்களை அடக்கியாளவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதீங்க! Manithan
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam