கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவி
இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 27 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு பொருட்கள் மற்றும் சட்ட உதவியும் வழங்கப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொருட்கள் மற்றும் சட்ட உதவி
கடந்த வாரம், இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு பகுதியில் 15 இந்திய கடற்றொழிலாளர்களுடன் இரண்டு இந்திய இழுவை படகுகளை கைப்பற்றினர்.

மேலும் 12 பேருடன் மூன்று இந்திய இழுவை படகுகள் நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு தீவுகளுக்கு அருகில் கைப்பற்றப்பட்டன.
இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 27 கடற்றொழிலாளர்களுக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் நேற்று உதவிகளை வழங்கியுள்ளனர்.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam