60 இலட்சம் ரூபா வலை - உடைமைகள் நாசம் - எமக்கு நஞ்சினை தந்துவிட்டு இந்திய மீனவர்களை அனுமதியுங்கள் (video)
ஒரு மாத காலத்திற்குள் 60 இலட்சம் ரூபா வலை, உடைமைகள் இந்திய இழுவைப் படகுகளினால் சேதமடைந்துள்ளதாகவும், இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கினால் எமக்கு நஞ்சுப் போத்தலைத் தந்து கொலை செய்யுங்கள் என்றும் யாழ்ப்பாணம் - காரைநகர் அம்பாள் கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் (14.02.2023) அம்பாள் கடற்றொழிலாளர் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
கைது செய்வதற்கு அனுமதி
எங்களது கடற்றொழில் அமைச்சர் சரி, எங்களது அரசாங்கம் சரி எமது பிரச்சினைகளில் கரிசினை கொள்கிறார்கள் இல்லை. இப்போது மீன்பிடி பருவகாலம். இவ்வாறான சூழ்நிலையில் எமது மீனவர்கள் தொழில் செய்து உழைக்கும் நேரத்தில், அவர்களது பல இலட்சம் ரூபா பெறுமதியான முதல்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஏனைய தொழிலாளிகள் கடலுக்குச் சென்று தொழில் செய்வதற்குப் பயப்படுகின்றனர். இது குறித்து கடற்படையினருக்கு தெரிவித்தவேளை தமக்குக் கைது செய்வதற்கு அனுமதி இல்லை என கூறுகின்றனர்.
இதற்கு முன்னர் படகுகள் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அவ்வாறு நடப்பதில்லை, எமது கரையிலிருந்து 5 கிலோமீட்டர் எல்லைக்குள் வந்து தொழில் செய்து எமது வளங்களை அழிக்கின்றனர்.
இந்திய, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூட எமது மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடிப்பதற்கு வருவதில்லை. நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு அவர்கள் அங்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
உங்களது நிவாரணம் வேண்டாம்...!
ஆனால் அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். உங்களது நிவாரணங்கள் எவையும் எமக்கு தேவையில்லை. எங்களை நிம்மதியாக தொழில் செய்வதற்கு விட்டால் நாங்கள் எங்களது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வோம். கடந்த ஒரு வாரமாகத்தான் எங்களுடைய கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகு மீனவர்களின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது.
அண்மையில் இந்தியாவில் இருந்து இரண்டு அமைச்சர்கள் இலங்கைக்கு வந்துவிட்டு சென்றுள்ளனர். அவர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி எமது கடலுக்குள் உள்நுழைந்து அழிவுகளை ஏற்படுத்தப்போவதாக எமக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
இலங்கை அரசின் அனுமதியோடு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதன் மூலம் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக உள்ளூர் மற்றும் இந்திய ஊடகங்கள் மூலமாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது.
இப்படியான ஏற்பாடுகள் ஏதாவது நடைபெற்றால் எமக்கு உங்களது நிவாரணம் வேண்டாம்.
எமக்கும் எங்களது மீனவர்கள் அனைவருக்கும் நஞ்சை தந்து கொலை செய்துவிட்டு
அவர்களை முழுமையாக இங்கு தொழில் செய்து வளங்களை அழிப்பதற்கு நீங்கள் அனுமதியை
வழங்குங்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
