இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக கைதுசெய்யப்படும் இந்திய கடற்றொழிலாளர்கள்
தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக தமிழக இணையத்தள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் நான்கு பேர் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.எனினும் அதனை இலங்கையின் கடற்படையும் மறுத்திருந்தது.
இந்தநிலையில் புதுவைச்சேர்ந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் இலங்கையின் கடற்படையால் தாக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

பதில் வழங்காமலிருக்கும் கடற்படை
இதன்போது ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் இலங்கையின் கடற்படையிடம் இருந்து பதில் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan