யாழ். விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் இந்திய நிதியமைச்சர்
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவிற்குப் பயணமாகியுள்ளார்.
மூன்றாவது நாளான இன்று(03.11.2023) யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு, அங்கு நடைபெறும் புதிய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு வர்த்தக கண்காட்சியை அவர் பார்வையிட்டுள்ளார்.
வடமாகாண பி.எஸ்.எம். சார்ள்ஸும் நிகழ்வில் கலந்துகொண்டு நிதியமைச்சரை சந்தித்துள்ளார்.
இந்திய அரசாங்க ஆதரவு
அத்துடன், எமது நாட்டுக்கு சர்வதேச நிதி உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கியதை நினைவுகூர்ந்த ஆளுநர், இந்திய நிதியமைச்சரின் வருகை இந்த நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நெருக்கத்தை மேலும் வளர்க்க உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வுகளில் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 2 நாட்கள் முன்

ரசிகர்கள் ஆவலுடன் பார்க்கும் மகாநதி சீரியலில் டுவிஸ்ட் வைத்த இயக்குனர்.. வைரலாகும் போட்டோ Cineulagam
