துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட அமெரிக்க வாழ் இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு
துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்டவர்களே இவ்வாறு இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க வாழ் இந்திய குடும்பத்தை சேர்ந்த 8 மாத குழந்தை உட்பட 4 பேர் துப்பாக்கிமுனையில் நேற்று கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
துப்பாக்கி முனையில் நெடுஞ்சாலையில் வைத்து மர்மநபரால் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தேடுதல் நடத்தி வந்தனர்.
கலிஃபோர்னியாவில் சடலமாக மீட்பு
இந்நிலையில் அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் கலிஃபோர்னியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கள்.
இந்தச் சம்பவம் அங்கு வாழும் இந்தியர்களை மிகவும் அச்சமடைய வைத்துள்ளதுடன் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
8 மாதக் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்லீன் கவ்வுர் (27) அவரது கணவர் ஜஸ்தீப் சிங் (36), இவர்களது உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் வடக்கு கரோலினாவின் மெர்சட் கவுன்டியில் இருந்து கடத்தப்பட்டனர்.
சந்தேகநபர் கைது
இதனையடுத்து மெர்சட் கவுன்டி ஷெரீஃப் வெர்ன் வார்ன்கே உத்தரவின் பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போனவர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் காணாமல் போன 4 பேரின் சடலமும் இண்டியானா சாலை மற்றும் ஹட்ச்ஹின்சன் சாலை ஓர பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கள்.
விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாயிகளின் கண்ணில் பட்ட சடலங்கள் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. கிடைத்த தகவலின் பேரில் 4 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.
இந்தக் கடத்தல் தொடர்பாக ஜீஸஸ் மேனுவல் சால்கடோ என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இந்திய குடும்பம் துப்பாக்கிமுனையில் கடத்தல்! தீவிரமடையும் விசாரணை |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam
