ஜெய்சங்கரிடம் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை

Gajendrakumar Ponnambalam M A Sumanthiran Mavai Senathirajah R. Sampanthan Dr. S. Jaishankar
By Rakesh Jan 20, 2023 07:41 PM GMT
Report

"அரசியல் தீர்வுத் திட்டம் சம்பந்தமாக இலங்கை அரசுடன் நடத்தப்படும் பேச்சுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களில் அரசால் வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும், அவை நிறைவேற்றப்படுவது இல்லை. எனவே, இனியும் காலம் தாமதிக்காது, தீர்வை வென்றெடுக்க இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு அவசியம்" என தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், இந்தியாவிடம் இன்று கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் இன்று நடைபெற்றது.

பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

இதன்போதே மேற்கண்டவாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்,

"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதியிடம் இன்று காலை வலியுறுத்தினேன். கூட்டுச் செய்தியாளர் சந்திப்பிலும் பகிரங்கமாக அறிவித்தேன்.

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்" என்று குறிப்பிட்டார்.

13ஐ ஏற்றால், ஒற்றையாட்சியை ஏற்றதாகிவிடும் என இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

"இருப்பதை நடைமுறைப்படுத்தாவிட்டால், அதுவும் இல்லாமல்போகலாம். எனவே, இடைக்காலத் தீர்வாகவேனும் 13 ஆவது திருத்தத்தை ஏற்க வேண்டும். தீர்வைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது மட்டும் தீர்வு அல்ல" என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

"தெற்கின் நிலை தற்போது மாறியுள்ளது. அவர்களுடன் நாங்கள் பேசலாம். அவர்களின் மனநிலையையும் நாங்கள் மாற்றலாம்" என்று கஜேந்திரகுமார் எம்.பி. குறிப்பிட்டுள்ளார். 

கஜேந்திரகுமார் எம்.பியின் இந்தக் கருத்துக்குச் சுமந்திரன் எம்.பியும் இணங்கினார். எனினும், இருக்கின்ற அதிகாரங்களை நாங்கள் உடனே பெற வேண்டும் என்று சுமந்திரன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

"இலங்கையின் தெற்கு மக்களுடன் கலந்துரையாடும் பணியை ஒரு நாடு என்ற வகையில் இந்தியாவால் மேற்கொள்ள முடியாது. அதனை நீங்கள்தான் மேற்கொள்ள வேண்டும்" என்று தமிழ்த் தலைவர்களிடம், இந்திய வெளிவிவகார அமைச்சர் இதன்போது எடுத்துரைத்துள்ளார். 

முதலாம் இணைப்பு 

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு  கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இன்று (20.01.2023) நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை அரை மணிநேரம் நடைபெற்ற இந்தப் பேச்சில் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம், மாகாண சபைத் தேர்தல், அரசியல் தீர்வுத் திட்டம் மற்றும் காணி விவகாரம் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

ஜெய்சங்கரிடம் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை | Indian Drjaishankar Ranil Meeting In President

தமிழ்த் தலைவர்கள் பலர் பங்கேற்பு

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி., தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஜெய்சங்கரிடம் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை | Indian Drjaishankar Ranil Meeting In President

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பி. தேர்தல் பணி காரணமாக இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

முக்கியமான சந்திப்பு

இந்நிலையில், தமிழ் தேசிய பரப்பில் இருக்கக்கூடிய தமிழ் தேசியம் சார்ந்திருக்க கூடிய கட்சிகளை ஓரணியாக அழைத்திருப்பது என்பது முக்கியமான செய்தியை கூறுவதற்கு மறைமுகமாக அரசியல் ரீதியாக முற்படுவதாக தெரிவதுடன் இன்னும் ஒரு தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் கட்சிகளுடைய ஒற்றுமையை இந்தியா விரும்புகின்றதா அல்லது என்ன விடயத்தை கலந்துரையாடப் போகின்றார்கள். இலங்கை அரசு எப்படியான வகையில் கலந்துகொள்ள வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமையில் இருந்து இரண்டு கட்சிகள் வெளியேறிய சூழ்நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் யார் யார் கலந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருக்கின்ற போது, ஜெய்சங்கருடனான சந்திப்பானது மிக முக்கியமான சந்திப்பாக அரசியல் பரப்பில் பார்க்கப்படுகின்றது.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US