இலங்கை விஜயம் செய்யவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மீளாய்வு செய்வதற்காக நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இரண்டு தினங்கள் அவர் இலங்கையில் தங்கியிருப்பதுடன், இதன்போது அவர் திருகோணமலை மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களுக்கு செல்லவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் இன்று (01.09.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகரகம்
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
இந்த சந்திப்புகளின் போது இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவுகளது, முழு வரம்பும் மீளாய்வு செய்யப்படும்.
இந்த விஜயம் இலங்கையுடன் தற்போதுள்ள நட்புறவுகளை மேம்படுத்துவதில் இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துகிறது.
அத்துடன் பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவை ஆழப்படுத்துவதில் இந்த விஜயம் ஒரு முக்கிய அடையாளமாகும் என்று உயர்ஸ்தானிகரத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |