இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கையில் அவர் திருகோணமலைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பெட்ரோலியப் பொருட்களை பரிமாற்றுவதற்காக இரு நாடுகளையும் இணைக்கும் இந்தியாவின் குழாய் பாதைக்கான மூலோபாய முதலீட்டுத் திட்டம் தொடர்பிலேயே அவரின் திருகோணமலை பயணம் அமைவதாக தெரியவருகிறது.
முக்கிய தரப்புக்களுடன் பேச்சு
இந்த நிலையில் அவர் செப்டெம்பர் 2 அல்லது 3ஆம் திகதி இலங்கைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முக்கிய தரப்புகளுடன் பேச்சு நடத்தவுள்ளார்.
இலங்கையும் இந்தியாவும் ஏற்கனவே தரைப்பாலம் மற்றும் எரிபொருள் இணைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த உயர்மட்டத்தில் ஒப்புக்கொண்டுள்ள சூழலில், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




