இலங்கைக்கு பயணிக்கும் இந்திய பிரஜைகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கைக்கு பயணிக்கும் அனைத்து இந்திய பிரஜைகளும் நாட்டின் திருத்தப்பட்ட கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் புதிய கோவிட் வழிகாட்டுதல்களின்படி, நாட்டிற்குள் வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் தடுப்பூசி அட்டைகளை எடுத்து வர வேண்டும் மற்றும் தடுப்பூசி போடப்படாத பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்ட எதிர்மறை பீ.சீ.ஆர் அறிக்கையை எடுத்து வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக 2022 டிசம்பரில் சர்வதேச பயணிகளுக்கான கோவிட் தடுப்பூசி சான்றிதழின் கட்டாயத் தேவையை இலங்கை நிறுத்தியுள்ளது. எனினும் திருத்தப்பட்ட கோவிட் வழிகாட்டுதல்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
புதிய கோவிட் தொற்று
இந்நிலையில் இலங்கைக்கு வருகை தரும் இந்திய பிரஜைகள் புதிய கோவிட் வழிகாட்டுதல்களுக்கு இணங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என இந்திய உயர்ஸ்தானிகரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 இல், இலங்கைக்கு வந்த 719,000 பயணிகளில் 123,000 பேர் இந்தியர்கள்.
அந்த வகையில் நாட்டிற்கான உள்வரும் சுற்றுலா சந்தைகளில் இந்தியா முதன்மை வகிக்கிறது.
ரஷ்யாவிலிருந்து மொத்தம் 91,372 சுற்றுலாப் பயணிகளும், இங்கிலாந்தில் இருந்து
பயணம் செய்த 85,187 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு 2022இல் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
