பிரித்தானியாவில் பரிதாபமாக உயிரிழந்த இந்திய குழந்தை: வைத்தியரின் அனுபவமின்மையால் நடந்த விபரீதம்
பிரித்தானியாவில், பயிற்சி பெற்று வரும் வைத்தியர் ஒருவர் செய்த தவறினால் இந்தியாவை சேர்ந்த குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த, ஆரவ் சோரா என்ற 3 வயது குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், குழந்தையின் உடல் புதிய கல்லீரலை ஏற்றுக்கொண்டிருக்காத நிலையில் குழந்தையின் கல்லீரலின் மாதிரியை சேகரித்து பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லீரல் மாதிரி
அந்த சோதனைக்காக ஆரவின் நெஞ்சு வழியாக ஊசி ஒன்றைச் செலுத்தி, அவனது கல்லீரலில் மாதிரியை சேகரிக்க வேண்டியிருந்தது.
மிகவும் கவனமாக, அனுபவம் மிக்க மருத்துவர்கள் செய்யவேண்டிய அந்த விடயத்தை, போதுமான அனுபவம் இல்லாத ஒரு பயிற்சி மருத்துவர் செய்துள்ளார்.
இதன்போது, ஊசி குழந்தையின் நெஞ்சிலிருந்த ஒரு முக்கியமான இரத்தக் குழாயை சேதப்படுத்திய நிலையில், மார்புக்கூட்டில் இரத்தம் கட்டி குழந்தை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
