156 வகையான மாத்திரைகளுக்கு தடை விதித்த இந்திய மத்திய அரசு
காய்ச்சல், உடல் வலி, சளி, ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பயன்படுத்தி வரும் 156 வகையான மாத்திரைகளுக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதன.
இதில் பெரசிட்டமோல் உட்பட்ட மாத்திரைகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பயன்படுத்தப்படும் மாத்திரை, மருந்துகள் அனைத்தும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடனேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மத்திய சுகாதாரத்துறை
எனினும் ஏதேனும் மாத்திரை, மருந்துகளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால் அதனை தடை செய்ய மத்திய சுகாதாரத்துறைக்கு முழு உரிமை உள்ளது.
அந்த வகையில் தான் தற்போது இந்தியாவில் நாட்டில் பயன்பாட்டில் உள்ள ஃஎப்டிசி பிரிவை சேர்ந்த 156 ஃபிக்சட் டோஸ் கொம்பினேசன் (Fixed Dose Combination or FDC) வகையை சேர்ந்த மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 'Aceclofenac 50mg + Paracetamol 125mg tablet', Mefenamic Acid + Paracetamol Injection, Cetirizine HCl + Paracetamol + Phenylephrine HCl, Levocetirizine + Phenylephrine HCl + Paracetamol. Paracetamol + Chlorpheniramine Maleate + Phenyl Propanolamine, and Camylofin Dihydrochloride 25 mg + Paracetamol 300mg உட்பட்ட 156 மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெரசிட்டமொல் ((Paracetamol), டிராமடோல்( Tramadol)இ ஃடவ்ரின் (Taurine) மற்றும் கஃபைன் (Caffeine) உள்ளிட்டவற்றின் கலவையில் உள்ள மாத்திரைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானியில் முக்கிய அறிவிப்பு
இந்த மாத்திரைகளில் உயிருக்கு ஆபத்து விளைவிப்பது மற்றும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் அம்சங்கள் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்தே அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த 12ம் திகதி மத்திய அரசின் வர்த்தமானியில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மத்திய அரசு இப்படி குறிப்பிட்ட வகை மாத்திரைகளை தடை செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் கடந்த 2016ம் ஆண்டில் 328 மாத்திரைகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.