கச்சதீவில் விபத்துக்குள்ளான இந்திய படகு : இருவர் மாயம்
இலங்கையின் வடக்கே கச்சதீவில் இருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான இந்திய படகிலிருந்து 2 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் இன்று (27.08.2024) மீட்டுள்ளனர்.
கச்சத்தீவு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் இன்று காலை நீந்திக் கரைக்கு வந்த ஒருவரை அவதானித்துள்ளனர்.
மீட்பு பணி
குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட கடற்படையினர், நான்கு கடற்றொழிலாளர்களுடன் வந்த தமது கப்பல், கடல் சீற்றத்தால் கவிழ்ந்ததாகவும், தான் நீந்தி கச்சதீவில் கரை ஒதுங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விரைவாக செயற்பட்ட கடற்படையினர், கச்சத்தீவுக்கு அருகில் உள்ள இலங்கை
கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களை தேடுதல் மற்றும் மீட்பு பணியை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, கடற்படையினர் மற்றொரு இந்திய கடற்றொழிலாளரை நீர் புதைகுழியில் இருந்து வெற்றிகரமாக மீட்டனர்.
கடற்படையினரால் மீட்கப்பட்ட இரண்டு கடற்றொழிலாளர்களும் நலமுடன் இருப்பதாகவும், அவர்களை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கச்சத்தீவு கடற்பகுதியில் கடல் நிலைமை சவாலான போதிலும், எஞ்சிய இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களை தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் கடற்படை தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |