வடக்கிலுள்ள இந்து - கிறிஸ்தவ ஆலயங்களை தரிசித்த இந்திய தூதுவர்
இலங்கைக்கான இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த நிலையில் வடக்கிலுள்ள இந்து - கிறிஸ்தவ ஆலயங்களை நேற்று (16) தரிசித்திருந்தார்.
அந்த வகையில் இலங்கையின் புனிதம் மிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான தொன்மைமிகு திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் அவர் வழிபாட்டினை மேற்கொண்டிருந்தார்.

மடு தேவாலயம்
குறித்த ஆலயமானது இந்தியாவின் நன்கொடையின் மூலம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க மடு தேவாலயத்தில் வழிபாடு செய்து வடமாகாண விஜயத்தை ஆரம்பித்ததுடன், மக்களின் நல்வாழ்வு - சுபீட்சத்துக்காக பிரார்த்தித்துள்ளார்.

அத்துடன் மடுதேவாலயத்தில் யாத்திரிகர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை விஸ்தரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri