இலங்கை - இந்தியா கலாசாரத்தின் அடையாளம் திருக்கேதீஸ்வர ஆலயம்! இந்திய தூதுவர் புகழாரம்
இலங்கை - இந்தியா கலாசாரத்தின் அடையாளமாக மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயம் விளங்குவதாக யாழ்.இந்திய துணை தூதுவர் கோபால் நடராஜ் ஜெபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தையொட்டி அவர் வெளியிட்ட அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை இந்தியாவுக்கான கலாசார உறவுகள் மிகவும் தொன்மையானது. அந்த வகையில் திருக்கேதீஸ்வர ஆலயத்தை புனரமைக்கும் முகமாக இந்திய அரசாங்கத்தினால் சுமார் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு எதிர்வரும் இன்று புதன்கிழமை 6ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் இடம்பெற உள்ளது.
திருகேஸ்வரா ஆலயத்தை புனரமைக்கும் பணி
திருகேஸ்வரா ஆலயத்தை புனரமைக்கும் பணியில் இந்திய மாபல்லபுர சிற்பிகளும் இலங்கையைச் சேர்ந்த சிற்பிகளும் இணைந்து கலாசார அடையாளங்களை முதன்மைப்படுத்தி சிலைகளாக வடிவமைத்துள்ளார்.

திருக்கேதீஸ்வரா பெருமானின் மகா கும்பாபிஷேகத்தை காண்பதற்காக இலங்கை பக்தர்கள் எவ்வளவு ஆவலாக உள்ளார்களோ அதே போல இந்தியாவில் இருந்து பக்தர்களும் குருமார்களும் வருகை தருவார்கள் என நம்புகிறேன்.ஆகவே திருக்கேதீஸ்வரன் அருளால் அனைவரிடமும் அன்பும் அறமும் பெருகட்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam